திருகோணமலையில் மதுபானத்துடன் நஞ்சருந்தியதில் இரு பெண்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி....
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம்வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ஒருவர் மது பானத்துடன் நஞ்சருந்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று(10) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தீசேகரராஜா டிலேகா வயது (19) மற்றும் மாவடிச்சேனை கரடியனாறு பகுதியை சேர்ந்த பிரேமகாந்தன் பிரஷாந்தினி வயது (29) இருவருமே இவ்வாறு மதுபானத்தில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பிரேமகாந்தன் பிரஷாந்தினி என்பவரின் இரண்டரை வயதுடைய குழந்தை உற்ப்பட மூவரும் திருகோணமலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று தங்கி இருந்ததாகவும் இருவரும் இன்று (10) காலை 11 மணி வரை கதவை திறக்காமையினால் இரண்டரை வயது சிறுமி அழுததையடுத்து ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கியதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேருமே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் தாயிடம் இருந்த குழந்தை பொலிசாரினால் தந்தையிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் நஞ்சருந்தியமைக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.