Header Ads

Breaking News
recent

திருமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை- பாலையூற்று பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (05) சந்தேக நபரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிரேம் 500 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

மேலும் குறித்த சந்தேகநபரை திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.