Header Ads

Breaking News
recent

திருகோணமலை கப்பல்துறை பிரதேச பாரம்பரிய விவசாய நிலங்கள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு...




திருகோணமலையில் கப்பல்துறை பிரதேச விவசாயிகள் நீண்ட காலமாக தமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் அவர்களது நீண்ட கால பிரச்சினையாக இருந்த அவர்களின் விவசாய நிலங்கள் உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் விவசாயம் செய்வதத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று (03) திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இவ்வாறு வழங்கப்பட்ட விவசாய காணிகள் வன இலாக்கா திணைக்களத்தினால் வன பிரதேசமாக எல்லையிடப்பட்டதாகவும் பின்னர் அவ்விடத்தில் விவசாயம் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கப்பல்துறை பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளிற்கு இணங்க மாண்புமிகு சபாநாயகர் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளை உரையாற்றி அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தன் விளைவாக இவ் விவசாய நிலங்கள் மிக விரைவாக விடுவித்து விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது

மேலும் இவ் விவசாய நிலங்களை விடுவிப்பதற்காக அனுமதி வழங்கிய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷனா பாண்டிகோரள,பிரதேச செயலாளர் உட்பட அனைத்து பொது அதிகாரிகளும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள பாராட்டியதோடு விவசாயிகளும் நன்றியினை தெரிவித்திருந்தனர்
Powered by Blogger.