மைய்யவாடிக்கான வீதி அமைத்தல் : நேரில் சென்று வாக்குறுதியளித்த உப தவிசாளர்
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பட்டினம் சூழலும் பிரதேச சபைகுற்ப்பட்ட பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கப்பல்துறை முத்துநகர் கிராமத்தில் மைய்யவாடிக்கான போக்குவரத்து பாதை ஒன்றினை அமைப்பதற்கான ஏற்ப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பட்டினம் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர் தெரிவித்தார்
நேற்று (25) நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மிக நீண்ட காலமாக மையவாடிக்கு செல்வதற்கு வீதி ஒன்று இல்லாமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியான்களுக்கு உள்ளன நிலையில் ஜனாஸாக்களை தூக்கி செல்லும் போது மழை மழை காலங்களில் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏட்படுவதாகவும் இவ் மைய்யவாடிக்கான வீதியினை அமைத்துத் தருமாறும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர்,பிரதேச அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்களினால் முன்வைக்க பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேரில் சென்று பார்வையிட்டதுடன் இவ்விதியினை அமைத்து தருவதாக வாக்குறுதியினையும் வழங்கியிருந்தார்
மேலும் இந்நிகழ்வில் பட்டினம் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர்,பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.