Header Ads

Breaking News
recent

நஞ்சற்ற வீட்டுத்தோட்ட விவசாயத்திற்கு நிதியுதவி : கபில நுவன் அத்துகோரள

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நஞ்சற்ற வீட்டுத்தோட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கிணறு அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று (25) குச்சவெளி கமநல சேவைகள் நிலையத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இவ் நிதியுதவியானது உலக வங்கியினால் வழங்க படுவதுடன் திருகோணமலை மாவட்டத்தின் நஞ்சற்ற வீட்டு தோட்ட விவசாய தோட்டத்திற்கான கிணறுகளை அமைப்பதற்காக வழங்கப்படுவதுடன் மாவட்டத்தில் மொத்தம் நூறு கிணறுகள் அமைப்பதட்ற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் குச்சவெளி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 14 நஞ்சற்ற வீட்டுத்தோட்ட விவசாயிகளுக்கு கிணறுகள் அமைப்பதட்க்கு மூன்று இலட்சம் பெறுமதியான நிதியுதவி வழங்கபட்டத்துடன்

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள,குச்சவெளி பிரதேச செயலாளர் மட்டும் குச்சவெளி கமநல சேவைகள் நிலைய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது








Powered by Blogger.