மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவித்தல் : ஏ.ஆர்.எம்.தௌபிக்...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்றிலிருந்து சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பைசர் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபிக் தெரிவித்துள்ளார்
இன்றையதினம் 16வயது,17வயது மற்றும் 18 வயது மாணவர்களுக்கு கோவிட் - 19 கொரோனா பைசர் தடுப்பூசி மாத்திரம் வழங்கப்படுகின்றது எனவும்
குறிப்பிட்ட பாடசாலைகளில் சென்று இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறு உங்களுடைய பாடசாலைகளில் தடுப்பூசி வழங்கும் மையம் இல்லாவிட்டால் அண்மையிலுள்ள தடுப்பூசி வழங்கும் எந்த ஒரு பாடசாலைக்குச் சென்றும் இவ் தடுப்புமருந்தினை பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபிக் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே நாம் அறிவித்தவாறு இத் தடுப்பூசி 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு மாத்திரமன்றி 16மற்றும் 17 வயது மாணவர் களுக்கும் இவ் தடுப்பூசியினை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவம் மாணவர்கள் தவறாது இவ் தடுப்பூசியினை பெற்று கோவிட் தாக்கத்திலிருந்து தங்களையும் தங்களது கும்பத்தினரையும் சமூகத்தினையும் பாதுகாத்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபிக் கேட்டுக்கொண்டுள்ளார்.