Header Ads

Breaking News
recent

திருமலையில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் சட்டவிரோத மதுபான உடற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்

இன்று (20) இவ் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உப்புவெளி போதைத்தடுப்பு இரகசிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இவ் சுற்றிவளைப்பு மேற்றக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது

இவ் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஐந்து பரல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒருதொகை கோடாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்றக்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.