செருவில ராஜமஹா விகாரைக்கு சமல் ராஜபக்ச விஜயம்...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை செருவில ராஜமஹா விகாரைக்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் உள்துறை அமைச்சர் சமல் ராஜபக்ச விஜயமொன்றை மேற்க்கொண்டிருந்தார்
இன்று (20) போயதினத்தினை முன்னிட்டு இவ்விஜயத்தினை மேற்க்கொண்டிருந்தார்
கடந்த 30 வருடகாலங்களாக நாட்டில் ஏற்றப்பட்டிருந்த யுத்தத்தினால் போராடி நாட்டினையும் நாட்டு மக்களையும் விடுவிக்க பாடுபட்ட இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாக இன்றைய போய தினத்தில் விசேட வழிபாடுகளுக்காக செருவில ராஜமஹா விகாரைக்கு சமல் ராஜபக்ச விஜயம் செய்திருந்தார்
இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.