Header Ads

Breaking News
recent

திருமலையில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
திருமலை மாவட்டத்தில் 300 இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணங்கள் செலுத்திய பற்றுச்சீட்டுகளும் இணைப்பினைப் பெறுவதற்கான ஆவணங்களும் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வுகள் புல்மோட்டை, இறக்கக்கண்டி, மூதூர், தோப்பூர், ஈச்சலம்பற்று ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உட்பட நிகழ்வுகள் நடைபெற்ற பிரதேசங்களின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், நீர் வழங்கல் காரியாலய பொறுப்பதிகாரிகள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.




Powered by Blogger.