Header Ads

Breaking News
recent

இந்திய வெளிவிவகார அமைச்சர் திருகோணமலை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு விஜயம்...


(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஹார்ஸ் வர்தன் சிங்லா திருகோணமலையிலுள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று (03) காலை விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்திய அரசுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய செயற்திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காக திருகோணமலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய சாலைக்கு சென்று தாங்கிகளையும் பார்வையிட்டார்.

சீனக்குடா விமான நிலையத்தில் இன்று (03) காலை 11 மணிக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குள் செல்வதற்காக இரு பக்க வீதிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் சீனக் குடாவில் உள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தையும், தாங்கிகளையும் பார்வையிட்டார்.

இதனையடுத்து அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பகல் உணவுக்காக சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் இன்று மாலை இந்திய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ் கலாச்சார மண்டபத்தை பார்வையிட செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு நேற்று சனிக்கிழமை சில அமைச்சர்கள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர்கள் சிலர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் எவரும் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.