சமுர்த்தி கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என கோணேசபுரி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோணேசபுரி பிரதேச மக்களுக்கு உரிய நேரத்தில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாமையால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இவ் சமூர்த்தி கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் கிடைப்பதில்லை எனவும் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறையே இக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
இவ்வாறு வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருகோணமலை நகர்ப்புறத்தில் உள்ள ஜின்னா நகர் காரியாலயத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோணேசபுரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுர்த்தி காரியாலயம் சரியாக இயங்குவதில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக கூலி தொழிலுக்கு கூட செல்ல முடியாமல் கஷ்டப்படும் கோணேசபுரி மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.