Header Ads

Breaking News
recent

உலக தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் ஒன்று கூடல் நாளை சம்பூரில் : இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
உலக தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உலக தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் இலங்கை கிளைக்கான பொதுச்செயலாளர் கந்தையா நேமிநாதன் தெரிவித்தார்

நாளை (24) ஞாயிற்றுக்கிழமை மூதூர் சம்பூர் மகாவித்தியாலயத்தில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் இலங்கை கிளைக்கான பொதுச்செயலாளர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் - 19 சூழ்நிலை காரணமாக ஓரிடத்தில் ஒன்று கூட்டி ஒன்று கூடலை நடத்த முடியாமையினால் கட்டம் கட்டமாக நாடு முழுவதும் இவ் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இன்றைய தினம் (23) சனிக்கிழமை திருகோணமலை விபுலானந்த அக்கல்லூரியில் திருகோணமலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் உடனான கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்

மேலும் நாளை சம்பூரில் ஏற்ப்பாட்டு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் மூதூர் பகுதியைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன்

உலக தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் சர்வதேச மாநாடு 2023 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
Powered by Blogger.