முகக் கவசம் இன்றி பொதுஇடங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : திருமலையில் பொதுமக்கள் விசனம்....
கொவிட் - 19 கொரோனா பேரலை காரணமாக நாடு முற்றாக முடங்கி தற்போது வழமை நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
நேற்று (21) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது...
நாடு வழமைக்குத் திரும்பியுள்ளது இக் காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நாட்டிற்குள் வருவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை அனுமதியளித்துள்ள நிலையில் திருகோணமலை கண்டி வீதி பிரதான வீதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் முகக் கவசம் இன்றி வீதியில் பயணிப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
எவ்வாறாயினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தெளிவு படுத்தாமல் இருக்குமா என சந்தேகம் ஏற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வீதிகளில் சுகாதார நடைமுறைகளை மீறி பயணிப்பதானது நாடு மீண்டுமொரு அபாயத்தை நோக்கி பயணிக்கும் என பொதுமக்கள் அச்சம் கொள்வதாகவும் நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முற்றுமுழுதாக நிறைவடையாத நிலையில் இவ்வாறு திருகோணமலை நகரில் முகக்கவசமின்றி வீதியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடையமெனவும் அவர்களுக்கான ஒழுங்கான வழிகாட்டல்கள் இல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிப்பது பெரிதும் பாரதூரமான விடயமாகும் எனவும் இவ்விடத்தில் உரிய அரச அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.