Header Ads

Breaking News
recent

திருகோணமலை மிஹிந்துபுர வித்தியாலயத்திட்ற்கு குடிநீர் தொகுதி கையளிப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் COVID-19 கொரோனா தொற்றினை கருத்திற் கொண்டு திருகோணமலை மிஹிந்துபுர வித்தியாலயத்திற்கு குடிநீர் தொகுதி ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது

இன்று (22) பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர் அவர்களினால் கையளிக்கப்பட்டது

பாடசாலை மாணவர்களின் சுகாதார நலன் கருதி பெரும் குறைபாடாக இருந்த நீர் தேவை மற்றும் தண்ணீர் தாங்கி வசதியினை ஏற்படுத்தித் தருமாறு திருகோணமலை மிஹிந்துபுர வித்தியாலயத்தின்
அதிபர் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் சிரியானி அவர்களின் வேண்டுகோளிற்க்கிணங்க இவ் குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது.

இவ் குடிநீர் தொகுதி அல் ஹித்துமத்துல் உம்மா அமைப்பின் அணுசரனையுடன் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட 18 பாடசாலைகளுக்கான குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உத்தியாகபூர்வமாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.