கிண்ணியா மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு : சந்தேக நபர்களை பிணையில் எடுக்க குடும்பத்தினர் முயற்சி...
(திருகோணமலை அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை கிண்ணியா ஆலங்கேணியைச் சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அதே பிரதேசத்தை சேர்ந்த தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்
இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேற்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25.10.2021 அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அதிகாலை 3மணியளவில் இடம்பற்றுள்ளதாகவும் எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மதம் 25ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்றுமாத கற்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தாற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை பச்சைநிற பாத்திரத்தில் எடுத்து உருத்திரமூர்த்தி அருள் என்பவர் மாணவி மீது ஊற்ற தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததாகவும் இக்குற்றத்தை சந்தேக நபர்களே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இவர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில் இவர்களுக்கு பிணை வழங்கினால் இவர்களினால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள் எனவும் இவர்களுக்கு சட்டத்தின் மீதுள்ள அச்சம் போய்விடும் எனவும் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பிரதேச மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில் இவர்களுக்காக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
கிண்ணியா ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்ததுடன் . இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார் என பாடசாலை ஆசிரியர்களால் பேசப்பட்டுவந்த இம்மாணவி இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றதாவும் தெரிவித்தனர் திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கிண்ணியா ஆலங்கேணியைச் சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அதே பிரதேசத்தை சேர்ந்த தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்
இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேற்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25.10.2021 அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அதிகாலை 3மணியளவில் இடம்பற்றுள்ளதாகவும் எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மதம் 25ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்றுமாத கற்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தாற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை பச்சைநிற பாத்திரத்தில் எடுத்து உருத்திரமூர்த்தி அருள் என்பவர் மாணவி மீது ஊற்ற தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததாகவும் இக்குற்றத்தை சந்தேக நபர்களே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இவர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில் இவர்களுக்கு பிணை வழங்கினால் இவர்களினால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள் எனவும் இவர்களுக்கு சட்டத்தின் மீதுள்ள அச்சம் போய்விடும் எனவும் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பிரதேச மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில் இவர்களுக்காக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
கிண்ணியா ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்ததுடன் . இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார் என பாடசாலை ஆசிரியர்களால் பேசப்பட்டுவந்த இம்மாணவி இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றதாவும் தெரிவித்தனர்