Header Ads

Breaking News
recent

திருகோணமலை கப்பல்துறை தி/சரஸ்வதி வித்தியாலயத்திற்கு குடிநீர் தொகுதி கையளிப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாடளாவிய ரீதியில்கோவிட் சூழலுக்கு மத்தியில் நாட்டின் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதினை கருத்துட்கொண்டு
COVID-19 கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் கப்பல்துறை தி/சரஸ்வதி வித்தியாலயத்தி குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது

நேற்று (28) சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களினால் கையளிக்கப்பட்டது

கடந்த காலங்களாக பாடசாலையில் நிலவிவந்த நீர் தாங்கி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் அதிபர்,அப்பகுதி சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கோரிக்கையினை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களிடம் முன் வைத்திருந்தனர். அதன் பிரதிபலனாக அல் ஹித்துமத்துல் உம்மா அமைப்பின் அனுசரனையுடன் இவ் குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு சுகாதார வழிமுறையினை பின்பற்றி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களினால் உத்தியாகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.
.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இதன்போது தமது நன்றியினை தெரிவித்ததுடன் இந்நிகழ்வில் கப்பல்துறை தி/சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள், மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.