வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியின்மை : பொருட்களுக்கு சேதம்...
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான மாறியுள்ளதோடு, நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக சிறைக்காவலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
கைதிகள் சிறைச்சாலைக்குள் உள்ள பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேதமடைந்த பொருட்களின் மதிப்பீடு இதுவரையில் கணக்கிடப்படவில்லை எனவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.