திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 04 உழவு இயந்திரங்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது...
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு வன பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 04 உழவு இயந்திரங்களுடன் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் பாலம்போட்டாறு வனப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சர்தாபுர விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவ் 04 உழவு இயந்திரங்களுடன் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதோ பிரதேசத்தை செர்ந்த 25 மற்றும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.