மொரவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மூவர் கைது...
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்திரலால் அவளின் வேண்டுகோளிற்க்கினங்க இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட திருகோணமலை சாந்திபுரம்,நொச்சிகுளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.