பவள விழா கண்டது திருமலை - வெள்ளைமணல் அல்.அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயம்...
திருகோணமலை தி/வெள்ளைமணல் அல்.அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75து வருட பூர்த்தியை முன்னிட்டு பவள விழா நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எம்.அமீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இவ்வைபவம் கடந்த முதலாம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆரம்பமானது.
பாடசாலை அதிபர் ஏ.எம் அமீன் அவர்களின் வரவேட்ப்புடன் ஆரம்பமான இந்நிகழ்வு பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தும் நிகழ்வாகவும் எதிர்காலத்தில் பவள விழாவினை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கான ஒரு ஒத்திகை நிகழ்வாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற ஆசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட மாணவர் தொகையுடன் குறிப்பிட்ட விருந்தினரை கொண்டு இந்நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.அமீன் அவர்கள் தெரிவித்தார்
மேலும் பவள விழாவினை எதிர்காலத்தில் மிக சிறப்பாக நடாத்துவதற்கு அனைவரின் ஒத்துழைபிணையும் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்
இன் நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் பாடசாலையின் 75வது வருட பவள விழாவில் தனது வாழ்த்துக்களையும் இவ்வாறு தெரிவித்திருந்தார்
இப்பாடசாலையின் பழைய மாணவர் என்ற அடிப்படையிலும் என்னால் முடிந்த உதவிகளை இந்தப் பாடசாலை அபிவிருத்திக்கு வழங்கி வருகின்றேன். எதிர்காலத்திலும் நமது பாடசாலைக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன்.
இப் பாடசாலை 46 மாணவர்களுடன் 1946.11.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று திருகோணமலை மாவட்டத்தில் பல துறைகளில் பல சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளது.
கல்வி துறையில் மாத்திரம் அன்றி கலைத்துறை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் பல சாதனை விருதுகளையும் பெற்றுள்ளது என்பதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் இதன்போது தெரிவித்து கொண்டதுடன் மாணவர்கள் ஒழுக்கத்துடன் தங்களுடைய கல்வியறிவை வளர்த்து நமது சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவைகள் செய்ய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இப்பாடசாலையின் இன் நிகழ்வினை ஏற்பாடு செய்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் தெரிவித்துக்கொண்டதுடன்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் கிண்ணியா அல் மினா மகா வித்தியாலயத்தின் அதிபருமாகிய எம்.வய்.எம் ஹதியத்துள்ளா அவர்கள் தமது உரையில் இப் பாடசாலையின் வரலாறு, பாடசாலை கட்டிடங்கள் அபிவிருத்தி, மற்றும் அவருடைய காலப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் சம்பந்தமாக எடுத்துரைத்ததுடன் எதிர்காலத்தில் பல துறைகளில் சாதனை புரிவதற்கு மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் இப் பாடசாலை அதிபரும் கிண்ணியா அல் மினா மகா வித்தியாலயத்தின் அதிபருமாகிய எம்.வய்.எம் ஹதியத்துள்ளா,சின்னம் பிள்ளை சேனை அல்/ புர்க்கான் வித்தியாலய மதிப்புக்குரிய அதிபர், நாச்சிக்குடா அல் மதீனா வித்தியாலய அதிபர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.