Header Ads

Breaking News
recent

தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் ஊடக மாநாடு திருமலையில் இடம்பெற்றது...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் ஊடக மாநாடு ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றது

இவ் மாநாடு நேற்று (30) திருகோணமலை தனியார் விடுதி ஒன்றில் அதிவண கலாநிதி ஆயர் கி.நோயல் இம்மானுவேல் மற்றும் தென்கயிலை தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது

முள்ளிவாய்க்கால் சமூக அரசியல் வரலாற்று வெளியில், ஈழத் தமிழ் மக்கள் தங்கள் கூற்று உரிமையின் அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளை முன்வைத்து, மக்களாட்சி அரத்திட்குட்பட்டு, மக்கள் தங்கள் ஆணையை வலியுறுத்துவதுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டு கோரிக்கைகள் தொடர்பில் கருத்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய, மக்களாட்சிகுறிய வெளிப்படை தன்மை இல்லாத சூழலில், அதற்கு மாற்றீடான சூழலை உருவாக்குவதற்கான வரலாற்றுத் தேவை உணரப்பட்டு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையிலும், நிரந்தரமற்று அமைகின்ற குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர் கலைகின்ற தீர்வின் தற்காலிக தன்மையை, நிலையற்ற தன்மையை ஈடு செய்வதற்காகவும், அதற்குப் பொருத்தமான பொறிமுறை சட்டத்தினை மக்களின் முன்மொழிவுககளினொடு கருத்துக்களைப் பெற்று உருவாக்குவதற்கான பொது முயற்சியினை, மக்கள் மைய அணுகுமுறையின் முறையியலை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களாட்சி செயற்குழு பரீட்சார்த்த முறையில் முதல் கட்டம் நிறைவுற்ற நிலையில் இவ் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்ப்பாடு செய்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவ் அமைப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதும் மக்களின் கருத்துகளை கோரி அதனை செயற்படுத்துவதும் இவர்களின் பிரதான நோக்கமாகவும் இருப்பதாக தெரிவித்ததுடன்

மேலும் பலமான பெருபான்மை அரசாங்கம் இருக்கும் இவ் காலகட்டத்தில் உங்களால் இவ் அமைப்பின் நோக்கு படி முன்னெடுத்து செல்ல முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தனர்

உங்களுடைய சந்தேகங்களை பலரிடம் இருக்கின்றது ஆனால் எந்த ஒரு முயற்சியும் தொடங்குகிற பொழுது சந்தேகங்களுடன் தொடங்கி சாதிக்கப்பட்டது சம்பவங்கள் பல இருகின்றது. நீங்கள் கூறியது போன்று ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாற்றுகின்ற கலாச்சாரம் இருக்கின்றது என்று மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையில் என்ற மனநிலையில் இந்த அரசியல் கலாச்சாரம் இருக்கின்றதாகவும் அவ்வாறு அந்த கோணத்தினை இல்லாமல்செய்வதத்திற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்ற பொறுப்புக்கூறலை அரசியல் பிரதிநிதிகள் கொடுப்பதற்கான களம் ஒன்றினை திறந்து வைக்கின்றோம் என்ற ஒரு நம்பிக்கை தங்களுக்கு தருவதாக இதன்போது தெரிவித்தார்

இவ் ஊடக மாநாட்டில் சட்டத்தரணிகளான யாழினி கௌதமன்,வி.எஸ். தனஞ்சயன் மற்றும் சேவியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.