மொரவெவ பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் : வீடுகள் உட்பட விதை நெல்களும் நாசம்....
திருகோணமலை மொரவெவ முதலாம் வாய்க்கால் பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
நேற்று (17) இரவு முதலாம் வாய்க்கால் பிரதேசத்தில் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது
நேற்று இவ்வாறு குடியிருப்புக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் வீடுகளையும் சேதம் செய்து விதை நெல்லுக்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை நாசம் செய்து வீட்டின் இலத்திரனியல் உபகரணம் உட்பட விவசாய உபகரணங்களையும் நாசம் செய்துள்ளது
இவ்வாறு இப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் மனிதன் யானை மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளதகவும் இப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பதட்க்கும் பெரும் அச்சம் கொள்வதாகவும் உரிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிதும் கவலையளிப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள இவ் அசாதாரண சூழ்நிலையில் இவ்வாறு விதைப்பதட்காக வைத்திருந்த விதை நெல் உட்பட வீடுகளையும் இவ் காட்டுயானைகள் இவ்வாறு சேதப்படுத்துவதாவது விசாயிகளுக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் எனவும்
முதலாம் வாய்க்கால் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் யானை வேலிகள் அமைத்திருந்தாலும் அவை உரிய வகையில் பராமரிக்க படாமையினால் காட்டு யானைகள் யானை வெளியினை தகர்த்திக்கொண்டு குடியிருப்புக்குள் நுழைவதாகவும் இவ்வாறு நுழைந்த யானைகளை விரட்டுவதட்கு வன இலாக்கா அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினாலும் அதிகாரிகள் விரைவாக செயட்படுவத்தில்லை எனவும் பிரதேச வாசிகள் குற்ற்றம் சுமத்துகின்றனர்
எனவே விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்டுள்ள மொரவெவ முதலாம் வாய்க்கால் பிரதேச மக்களின் விவசாயத்தினை பாதுகாக்க உரிய அதிகாரிகள் இவ்வாறு அரசாங்கத்தினால் பல இலட்சம் சிலவு செய்து அமைக்கப்பட்ட யானை வேலிகளை உரிய முறையில் பராமரித்து காட்டு யானைகளிடமிருந்து எமது விவசாயத்தினையும்,உடமைகள் மற்றும் உயிர்களையும் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.