Header Ads

Breaking News
recent

தம்பலகாமத்தில் இரண்டு யானைகள் மரணம்...

max தமிழ் செய்தியாளர் 
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பொத்த பகுதியில் இரண்டு யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (11) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக இவ் இரண்டு யானைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்து யானைகள் மரணித்தமை தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

இப்பிரதேசத்தில் தொடற்சியாக யானைகள் காயங்களுக்குள்ளாவதும் மரணிப்பதும் இடம்பெறுவதாகவும் குறித்த யானைகள் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் பொலிசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்ததுடன்.





Powered by Blogger.