Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் செயலாளமர்வு : இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பங்களிப்பு...

max தமிழ் செய்தியாளர் 
ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் இடம் பெற்றது.

இன்று (11) இச் செயலமர்வு அலஸ்தோட்டம் தீபம் சுற்றுலா விடுதியில் இட‌ம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட ஊடக சமூகத்தின் ஏற்பாட்டில்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்,எகட் ஹரித்தாஸ் நிறுவனம் இணைந்து நடாத்தப்பட்ட இச் செயலமர்வு, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், அதன்படி, தகவல் அறியும் உரிமை என்பது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமல்ல அனைத்து பிரசைகளுக்கும் பொதுவானதாகும் என எடுத்துரைக்கப்பட்டது.

இவ் தகவல் அறியும் சட்ட மூல செயளமர்வு திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி சுமார் 25 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வாங்கப்பட்டது

வளவாளராக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உத்தியோகத்தர் கமல் லியனாராய்ச்சி, தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஆர்த்தி ரவிவர்மண்,எகட் ஹரித்தாஸ் நிறுவனதின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ்டன் ஃப்ரெட்ரிக் ஜோசப், திருகோணமலை மாவட்ட ஊடக சமூகத்தின் தவிசாளர் மங்களனாத் லியனாராச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Powered by Blogger.