Header Ads

Breaking News
recent

சீரற்ற காலநிலை : காட்டு வெள்ளம் பாய்ந்தோடக்கூடிய வடிகான் அமைக்கும் பணி ஆரம்பம்...

max தமிழ் செய்தியாளர் 
நாட்டின் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக காட்டு வெள்ளம் பாய்ந்தோடக்கூடிய வடிகான் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நாச்சிக்குடா பொது விளையாட்டு மைதானத்திற்கு மலைப் பகுதியிலிருந்து காட்டு வெள்ளம் பாய்ந்து மைதானத்தினை சேதமாக்குவதனால் மைதானத்திற்குள் வெள்ளம் பந்தோடுவதனால் அப்பகுதியில் மழை நீர வடிந்தோடுவததற்கான வடிகான் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மைதானத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வடிகான் அமைத்து தருமாறு நாச்சிக்குடா கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் எழுத்து மூலமாக பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளதினை அடுத்து பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களினால் இவ் வடிகான் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் 2021ம் ஆண்டின் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு சுமார் 110 மீட்டர் அளவில் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் இளைஞர்களின் நலன் கருதி மைதானத்தில் வடிகான் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதுடன்


இதன் போது நாச்சிக்குடா கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல வருட காலமாக நிலவி வந்த இவ் மைதானம பிரச்சனைக்கு இந்த வேளைத்திட்டத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.