வழக்கும் அரசாங்கத்திடம் பொருளும் அரசாங்கத்திடம் : சீன உரம் வழக்கு தொடர்பில் திருமலையில் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு...
சீன உரகப்பல் வழக்கு தொடர்பில் வழக்கும் அரசாங்கத்திடம் வழக்கு போடப்பட்ட பொருளும் சரசாங்கத்திடன் இவ்வாறு இருக்கையில் இவ் வழக்கு தாக்கல் தொடர்பில் பெரிதும் சந்தேகம் ஏற்றப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்
நேற்று (09) திருகோணமலை விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு அவருடைய கடமை மற்றும் சட்டம் தொடர்பில் அவருக்கு நான் சொல்லிக்கொடுக்க தேவையில்லை
நேற்று முன்தினம் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார் சீன உரம் நிறுவனத்துடன் எமக்கு இருக்கும் தொடர்பு வணிகம் மாத்திரமே இதனால் நட்டிட்கு எந்த ஒரு அவமானமும் இல்லை என தெரிவித்திருந்தார்
நான் அவரிடம் கேட்கின்றேன் நட்டிட்ற்கு அவமானம் இல்லா விட்டால் சீன துரகத்தில் கூடிய கூட்டம் எதற்கு?
இதேபோன்று ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தூதரகத்திற்கு சென்று குழப்பம் விளைவித்தல் மக்கள் எவ்வாறு வியாபாரம் செய்வது?
சீனாவுடன் வியாபார கொடுக்கல் வாங்கல் என்றால் ஏன் மக்கள் வங்கியினை கருப்பு பட்டியலில் இணைக்க வேண்டும்?
இவ்வாறான செயற்ப்பாடு உங்களை ஆட்சிக்கு அமர்த்திய மக்களை ஏமாற்றும் செயல் நட்டு மக்கள் உங்களை இன்னும் நம்புவதற்கு முட்டாள்கள் இல்லை,மக்கள் வாக்களித்து ஒவ்வொரு முறையும் முட்டாள் என்று ஜீ.எல்.பீரிஸ் நினைப்பார் என்றால் அது அவரின் பிழையான எண்ணம் ஆகையால் நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்வது தயவு செய்து உடனடியாக இந்த உர கப்பல் பிரச்சினையினை நாட்டு பிரச்சினையாக எடுத்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் இப்பிரச்சினையினை நாட்டுப்பிரச்சினையாக கொண்டு மக்களை ஒன்று திரட்டுவோம் என இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்
மேலும் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, ஊடககளின் ஊடாக மக்களை ஏமாற்றுவதனை விட்டுவிட்டு உடனடியாக ராஜதந்திர முறையினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
நான் கேட்கின்றேன் விமல் வீரவன்ச,உதயங் கம்மன்பில எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாள் அரசாங்கத்தில் இருக்கும் பெரியமனிதர்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் நிலத்திலுக்கும் மண்ணை உண்டிருப்பார்கள்,உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள்,தேரர்களை வீதிக்கு இறக்கியிருப்பார்கள் நாட்டின் வளம் நாசமடைகின்றது என்று நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து விட்டார்கள் என்று அறைக்கூவல் விடுத்திருப்பார்கள் தற்போது பிட்டு விழுங்கியவர்கள் போன்று சத்தமில்லாமல் இருக்கின்றனர் இவர்களை ஆட்சிக்கு அமர்த்துவதற்க்காக் பாடுபட்ட மகாநாயக்க சங்கத்தினர்,சமய கட்சிகள் அனைவரும் ஒன்று திரண்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பிரச்சினை இது. என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்
மேலும் இது உர கப்பல் பிரச்சினை மட்டுமல்ல அவ்வாறு உரக்கப்பல் பிரச்சினை என்றால் டொலர் கணக்கில் நட்டம் அதனை சீர் செய்ய முடியும் அத்துடன் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் இது அவ்வாறல்ல இரு நாடுகளுக்குமிடையியில் ஏட்பட்டுள்ள இராஜதந்திர மட்டத்தில் ஏட்பட்டுள்ள பிரச்சினை.
எனவே முதுகெலும்பில் பலமுள்ள இலங்கையர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்கின்றோம் இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவும் இவ்வாறான செயட்பாடுகளில் தெளிவாக புரிகின்றது ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் சட்ட தெவிவு தொடர்பில் கவலையளிக்கிறது என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி
அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் அநேகமான வழக்குகள் மீள பெறப்பட்டுள்ளது இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்
ஊரில் சொல்வார்கள் ''வழக்கும் ஹமதுருவினுடையது பொருளும் ஹமதுருவினுடையது'' என்பார்கள் அதே போன்று வழக்கும் அரசாங்கத்தின் பொருளும் அரசாங்கத்தின் அதனால் தான் வழக்கினை பலர் வாபஸ் பெருகின்றனர் இதன்போது போது கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகின்றது நாட்டின் சட்ட அதிகாரிகளின் சட்ட அறிவு,சட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை நிலைக்குலைந்துள்ளது
இதனால்தான் மக்களுக்கு தெளிவுபடுத்தினோம் எந்த அரசாங்கத்திடற்கும் மூன்றில் இரண்டு வாழங்க வேண்டாம் என்று அவர்கள் அது வேண்டும் என்றார்கள், அண்ணனும் தம்பியும் ஒருபக்கம் இருக்கும் போது எதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க வேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பினோம் ஆனால் இவர்கள் ஜனாதிபதியின் வேலையினை "நல்லா செய்ய" மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று அடம்பிடித்தார்கள் அவ்வாறு வழங்கபட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் விளைவு தற்போது அனுபவித்துகொண்டிடுக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்
மேலும் நேற்றைய விஜயத்தின் போது திருகோணமலையின் பொது மீன் சந்தையினை பார்வையிட்டதுடன் ஆதரவாளர்களையும் சந்தித்து உரையாடியதுடன் திருகோணமலை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர உட்பட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.