Header Ads

Breaking News
recent

முனவ்வரா இளைஞர் கழகத்தின் 15வது வருட பூர்த்தி : புதிய கழக சீருடையும் அறிமுகம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் நாச்சிக்குடா கிராம சேவையாளர் பிரிவிட்குட்பட்ட மக்குளூற்று கிராமத்தின்

முனவ்வரா இளைஞர் கழகத்தின் 15 வருட பூர்த்தியை இட்டு கலகத்திற்க்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது

நேற்று (09) உத்தியோகபூர்வமாக இவ் கழக சீருடை பட்டினமும் சூழலும் இளைஞர் சேவை அதிகாரி ஜாபீர் அவர்களினால் வழக்கிவைக்கப்பட்டது

முனவ்வரா இளைஞர் கழகம் 2006ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு சிறப்பாக இயங்கிவரும்ஒரு இளைஞர் கழகம் ஆகும்.முனவ்வரா இளைஞர் கழகத்தின் 15வது வருட பூர்த்தியினை முன்னிட்டு முன்னாள் பதவி வகித்த இளைஞர் கழகத்தின் தலைவர்களுக்கும் மூத்த வீரர்களுக்கும் புதிய கழக சீருடை வழங்கி கௌரவிக்கப்பட்டது

இந் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஆர் எம் சிபான் அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்குளூற்று கரப்பந்தாட்ட மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் இளைஞர் சேவை அதிகாரி ஜாபீர், முன்னாள் முனவ்வரா இளைஞர் கழகத்தின் தலைவர்கள்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் மற்றும் இளைஞர் கழக உறுப்ப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சிபெற வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.





Powered by Blogger.