கட்டு துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி...
(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ரம்பாவ எனுமிடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் காவலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கட்டு துவக்கு வெடித்ததாகவும் தெரியவருகின்றது.
தற்போது இவரது சடலம் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.