Header Ads

Breaking News
recent

திருமலையில் கைக்குண்டு ஒன்று மீட்ப்பு...



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ பகுதியில் தனியார் காணியொன்றில் கைக்குண்டொன்று

நேற்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியாருக்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இந்த கைக்குண்டை கண்டதாகவும் அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு தெரியப் படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த கைக்குண்டை வெடிக்க வைக்கும் கந்தளாய் நீதிமன்றத்தின் அனுமதியை பெற உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
Powered by Blogger.