Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் : விழிப்புணர்வு செயற்ப்படுகளும் முன்னெடுப்பு...

(ADMIN)
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது

நாட்டில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளைப் பல கட்டங்களாக மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது

அதன்படி முதற்கட்டமாக, 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதன்பின்னர், இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு வகுப்புகளும் கடந்த மாதம் 25ஆம் திகதி திறக்கப்பட்டன

இதனையடுத்து, மூன்றாம் கட்டமாக அனைத்துப் பாடசாலைகளினதும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகின

இந்தநிலையில், இதுவரையில் ஆரம்பிக்கப்படாமலிருந்த 06, 07, 08 மற்றும் 09 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு கடந்த வாரம் தீர்மானித்திருந்தது

அதன்படி, திருகோணமலையில் உள்ள அனைத்து பாடசாலைகளினும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமானது

இதேவேளை, நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென பாடசாலையின் பகுதித்தலைவர்களினால் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன்

அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணிக்கப்படுவதுடன்

பாடசாலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பிலும் வகுப்பறையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றுதல் தொடர்பில் விழிப்புணர்வு செயற்ப்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.