கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு....
படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் இவ் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் (25) அனைத்து வீடுகள்,கடைகள்,அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வௌ்ளை கொடிகளை பறக்கவிட்டு அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கிண்ணியாவில் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மூடி இவ் துக்க தின அனுஷ்டிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுளதினைஅவதானிக்க கூடியதாக இருக்கிறது
மோலும் எவ்வித ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அனைவரும் தங்களின் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரேர்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன்.
கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம்,பள்ளிவாயில்கள் சம்மேளனம்,உலமா சபை, ஸுரா சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.