கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்திற்கு இலங்கை கடற்படையினரினால் இலவச படகு சேவை ஆரம்பம்...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றினை கடப்பதற்கு இலங்கை கடற்படையினரினால் இலவச படகு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
நாளை (26) உத்தியோகபூர்வமாக எவ் கடற்படையின் படகுசேவை ஆரம்பமாகவுள்ளது
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பலத்தின் நிர்மாணப்பணி நடைபெற்று வரும் நிலையில் அவ் ஆற்றினை கடந்தது செல்வதற்காக கிண்ணியா நகரசபையினால் தனியார் ஒருவருக்கு இழுவை படகு மூலம் கட்டணம் செலுத்தி படகு சேவை நடைபெற்றிருந்தது
இந்நிலையில் அவ் இழுவை படகு நேற்று முன்தினம் பாடசாலை மாணவர்கள் உட்பட பலருடன் பயணித்த நிலையில் விபத்திக்குள்ளாகி பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை கடற்படையின் படகு சேவை ஒன்று நாளைமுதல் ஆரம்பிக்க பட உள்ளது
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட படகில் ஆகக்கூடிய தொகையாக 25 பேர் வரை பயணிக்க மூடும் எனவும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் தனித்தனியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இன்றையதினம் இவ் படகு சேவை இன்றையதினம் திருகோணமலை கடட்ப்படையினரினால் மேற்ப்பார்வையிட்டு வந்ததுடன் நாளை முதல் இவ் படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.