Header Ads

Breaking News
recent

வாழ்வோரை வாழ்த்துவோம் : ஒய்வு பெறுகிறார் சீனக்குடா தமிழ் வித்தியாலய அதிபர் கனகசூரியம் யோகானந்தன்...



திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை சீனக்குடா தமிழ் வித்தியாலய அதிபர் மதிப்புக்குரிய கனகசூரியம் யோகானந்தன் அவர்கள் 2021.11.11அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்

அவர் கல்வித்துறையில் ஆற்றிய சேவைகளுக்காக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்கள் பாடசாலைக்கு நேரில் சென்று மக்கள் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

அவர் அதிபராக இருந்த சந்தர்ப்பத்தில் சீனக்குடா பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவருடன் சேர்ந்து பணியாற்ற கிடைத்த அரிய வாய்ப்பினை இந்த சந்தர்ப்பத்தில் கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்கள் நினைவு கூர்ந்தார்

அவருடைய அன்பான பேச்சும் இலக்கிய ஆளுமையும் நிர்வாக திறமைகளும் அவரையறிந்த அனைவரையும் போல தன்னையும் கவர்ந்ததாகவும்

மதிப்புக்குரிய கனகசூரியம் யோகானந்தன் அதிபர் அவர்களுடைய
ஓய்வு காலம் சிறப்பாக அமைய முழு மனதோடு பிரார்த்திப்பதுடன் இலக்கிய பரப்பில் அவர் இன்னும் பிரகாசிக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் இதன் போது
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்கள் தெரிவித்தார்.
Powered by Blogger.