Header Ads

Breaking News
recent

6 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை அலெக்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது

நேற்று (14) மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இவ் போட்டி இடம்பெற்றது

இவ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சமூக நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் நோக்கில் 10 அணிகள் உள்வாங்கப்பட்டு போட்ட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதிப்போட்டிக்கு லிவர்பூல் அணி மற்றும் அலெக்ஸ் அணியினர் தகுதி பெற்றதுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய லிவர்பூல் அணி 6ஓவர்களுக்கு 25 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

26 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய திருகோணமலை அலெக்ஸ் அணியினர் மூன்று ஓவர் 4 பந்துகளில் வெற்றி இலக்கை அடைந்து வெற்றி வகை சூடினார்

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ் பேட்ரிக் ஜோசப்,டிக்கெட் கரீட்டா திட்ட உத்தியோகத்தர் எம் ஏ எம் றிஸ்மி மற்றும் திருகோணமலை யுனைட்டட் கிங்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டித் தொடரை திருகோணமலை யுனைட்டட் கிங்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.