2022 BUDJET வாக்கெடுப்பு : பாராளுமன்றத்தில் குந்தி விட்டு எழும்பி வரவேண்டாம் 20க்கு வாக்களித்த எம்.பி களுக்கு - அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
2022 வரவு செலவுத் திட்டம் என்பது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களது முதலாவது வரவு செலவுத் திட்டம். நிதி அமைச்சர் என்ற வகையில் பசில் ராஜபக்ச அவர்கள் பற்றிய நாட்டில் ஒரு நல்ல நம்பிக்கை இருக்கின்றது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார் .
நேற்று (14) அவரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது...
பசில் ராஜபக்ச மீது வைத்துள்ள அந்த நம்பிக்கை பாதிக்கப்படாத வகையில் வருகின்ற ஒரு மாதத்தில் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை அந்த பட்ஜெட்டில் என்ன இருக்கின்றது என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்ற போது தான் எங்களால் அறிந்துகொள்ள முடியும்.
இதிலே சிறுபான்மை பாரளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே பாராளுமன்றத்தில் குந்தி விட்டு எழும்பி வராமல் உன்னிப்பாக இவ்விடயத்திலாவது கவனம் செலுத்தி இந்த நாட்டின் அரச ஊழியர்களுக்கு,ஆசிரியர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களை பிரதிபலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உன்னதமான கடமையாகும் என தெரிவித்த அப்துல்லா மஹ்ரூப்.
இந்த விடயத்தில் சமூக ஒற்றுமை இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் வெளிக்காட்டவேண்டிய தருணம் இதுவாகும்
இதேவேளை ஒரு பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது கடந்த காலத்தில் ஒரு வலுவை ஏற்படுத்திய இருபதாவது சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்று சிறுபான்மையினர் சிறையில் அடைக்க படுவதற்கு காரணமாக இருந்ததைப் போன்று இந்த வரவு செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பால் படுத்துகின்ற அல்லது பழி வாங்குகின்றன ஒரு வரவு செலவுத் திட்டமாக அமையக்கூடாது. இதில் இருக்கின்ற நன்மைகளையும் தீமைகளையும் தெளிவாகப் புரிந்து இதற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.