Header Ads

Breaking News
recent

தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட் தயாரிக்காதீர்கள் : கிழக்கு மாகாண ஆளுநர்.



திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட மனக்குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (15) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

“பட்ஜெட்டை தோற்கடித்து தலைவர்களிடம் தனிப்பட்ட குறைகளை தீர்த்துக்கொள்ள முயற்சிக்க தயாராக வேண்டாம்.அப்படி நடந்தால் கிராமத்தின் அபிவிருத்தி பணிகள் தடைபடும். இந்த நாட்டை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ்ச அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த சபைகள் நிலையற்றதாக மாறினால் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பின்னோக்கிச் செல்லும். தனிப்பட்ட குறைகளை தனித்தனியாக தீர்க்கவும். அபிவிருத்திப் பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்க உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஆதரவு தாருங்கள்.மேலும் பிரதேச சபைக்கு வருமானம் ஈட்ட நல்ல வழி உள்ளது.இயற்கை உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருமானம் ஈட்டவும். அதற்கு தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம், என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சுற்றிக்காட்டினார்

திருகோணமலை கோமரன்கடவல பதவி ஸ்ரீபுர மொறவெவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களுடனும் அரசாங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.