Header Ads

Breaking News
recent

திருமலையின் மூத்த ஊடகவியலாளரின் கை ஓய்ந்தது...




திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.அப்துல் பரீட் ஆசிரியர் அவர்களின் கை ஓய்ந்தது

இன்று (16) திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்

இவர் தினகரன் பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட விசேட நிருபரும் தமிழ் மிர்ரர் பத்திரிக்கையின் பிராந்திய சொய்தியாளரும் ஆவார்

கிண்ணியா- நடுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எம்.ஏ. அப்துல் பரீட் தனது 63-வது வயதில் காலமானார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பொற்று வந்திருந்த நிலையில் இன்று (16) நண்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

அன்னாரின் ஜனாஸா, கிண்ணியா ரஹ்மானியா பொது மையவாடியில் இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அன்னார்க்கு வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்கத்தை வழங்க திருகோணமலை ஊடகவியலாளர் சார்பில் பிராதிக்கின்றோம்.
Powered by Blogger.