Header Ads

Breaking News
recent

கிண்ணியா இழுவைப் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கிண்ணியா பிரதேசத்தில் அமைதியின்மை ....


குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

காப்பற்றப்பட்டவர்கள் எம்பியூலன்ஸ் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இவ்விபத்தில் 06 மாணவர்கள்உட்பட ஒரு ஆசிரியர் மற்றும் வயோதிபர் ஒருவர் உள்ளடங்கலாக 08பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சோகமான சம்பவத்தை அடுத்து பொதுமக்களினால் உள்ளூர் அரசியவாதிகளுக்கு எதிராக கிண்ணியா சந்தியில் டயர்கள் எரிக்கப்பட்டு தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்விபத்தில் பலர் மரணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது. எனினும்,. சரியான மரண விபரம் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















Powered by Blogger.