Header Ads

Breaking News
recent

Update : கிண்ணியா பிரதேசத்தில் தொடரும் பதட்ட நிலை : கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது - பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் இல்லமும் சேதம்....

இன்று காலை இடம்பெற்ற மோட்டார் இழுவைப் படகு விபத்தில் 06 மாணவர்கள்உட்பட ஒரு ஆசிரியர் மற்றும் வயோதிபர் ஒருவர் உள்ளடங்கலாக 08 பேர் உயிரிழந்துள்ளதோடு இதுவரை ஆற்றில் மூழ்கிய 17 பேரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு உயிரிழந்த சிலரின் விபரம் திரட்ட பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டங்கள் தெரிவிக்கின்றன அதனடிப்படையில் சகு சஹீ (வயது-மூன்றரை),சஹிலா(வயது-6),பரீஸ் பகி (வயது - 6) ஷேஹப்துல் சாகர் எவ். சரீன் (வயது-8) மற்றும் சப்ரியா (வயது - 30) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களுள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மேலும் கிண்ணியா வைத்திய சாலை பிரதான வீதி மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் முன்பாக பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்

இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடலங்கள் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படாமல் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும்

புதிதாக அமைக்கப்பட்ட குறிஞ்சாக்கேணி பலத்தை அமைப்பதத்திற்கு முன்னர் அதற்கான பாதுகாப்பான மாற்று வீதியினை அமைத்த பின்னரே புதிய பாலத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் இவ்வாறு இருக்கையில் இவ் புதிய பல நிர்மாணத்திட்கு அனுமதி வழங்கியது தொடர்பில் விசாரணை வேண்டுமெனவும்

திருகோணமலை மாவட்டத்தின் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற கிண்ணியா பிரதேசத்தில் இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெற்றமைக்கு பிரதேச அரசியல் வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் எனவும் கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் இவ்விடத்திட்ற்கு வருகைதர வேண்டுமெனவும் கோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது

மேலும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் இல்லமும் ஆர்பாட்டக்காரர்களினால் முற்றுகையிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.











Powered by Blogger.