Header Ads

Breaking News
recent

காதில் ஹெட்போன் : ரயிலில் மோதி இளைஞன் பலி...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
கொழும்பிலிருந்து இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானவர் முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டை சதாம் நகரை சேர்ந்த ஹமீத் முபீத் (20வயது) திருமணமனவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது...

நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று முள்ளிப்பொத்தானை புகையிரத நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் சக நண்பர் மேலும் ஒருவருடன் கதைத்து கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளான நபர் தொலைபேசியில் ஹெட்போன் அணிந்தவாறு பேசிக்கொண்டிருந்ததாகவும் சக நண்பர்கள் புகையிரதம் வருவதை அவதானித்து கூச்சலிட்டதாகவும் ஹெட்போன் அணிந்திருந்தமையினால் அவருக்கு சரியாக கேட்காத நிலையில் இருவரும் அவரை நோக்கி ஓடிய போதும் ரயில் வேகமாக அவரை மோதியதாகவும் சக நம்பர்கள் தெரிவித்தனர்

மேலும் விபத்துக்குள்ளானவரின் தலை துண்டிக்க பட்ட நிலையில் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Powered by Blogger.