திருகோணமலையில் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்...
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கோணேசபுரி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்
நேற்று (15) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது மீள்குடியேற்ற கிராமமான கோணேசபுரி பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பாவனையிலிருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடம் பிரதேச சபையினால் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
தேசத்தில் தமது ஜீவனோபாய தொழிலாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலினை தமது வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். இவ்வாறு இருக்கையில் வருடம்தோறும் பிரதேச சபைக்கு தவறாமல் சந்தா பணம் செலுத்தப்பட்டு பிரதேச சபையினால் பதியப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பிடம் தற்போது தனியார் மயப்படுத்தப்படுவது தமது வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவித்தனர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ''பறிக்காதே பறிக்காதே வாழ்வாதாரத்தை பறிக்காதே'' ''நீ வேண்டும் நீ வேண்டும் என்று நீதி வேண்டும்'' ''ஏழைகளுக்கு எதிராக அதிகார பலத்தை காட்டாதே'' என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்
ஆர்ப்பாட்டத்தில் தமது முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் அத்துமீறி நடப்பட்ட எல்லை மரங்கள் ஆர்ப்பாட்டகாரர்களினால் பிடுங்கி வீசப்பட்டதுடன் அப்பிரதேசத்தில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தத்தக்கது.