மோட்டார் சைக்கிள் மற்றும முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் வைத்தியசாலையில்...
திருகோணமலை - அனுராதபுர பிரதான வீதி கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கட்டைப்பறிச்சான் ,கெஹல் இராணுவ வீரரான இப்பாகமுவ,கெஹல்கமுவ,
பண்டாரவத்த பகுதியைச் சேர்ந்த தனுஷ்க பெரேரா (28 வயது) மற்றும் திருகோணமலை-மனையாவெளி பகுதியைச் சிவக்குமார் மதேஷ்
(22) வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.