Header Ads

Breaking News
recent

திருமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் உதயம்..

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது 

நேற்று (28) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இவ் கலந்துரையாடல் இடம் பெற்றது.  

அகில இலங்கை அபிவிருத்தி சங்கம்,பொருளாதார அபிருத்தி சங்கம்  இணைநந்து நடத்தப்பட்ட இக் கலந்துரையாடலுக்கு திருகோணலை மாவட்ட செயலகம்,   பிரதேசசெயலக மற்றும் பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

இதில்  சங்கம் வலூவான சங்கமா செயற்படுவது சங்கத்தின் நோக்கம் தொடர்பான விளக்கத்தினை அபிவிருத்தி சங்க  தலைவரும் அகில இலங்கை சங்க செயலாளருமான  அனுராத செனவிரத்ன தெரிவித்தார். 

அகில இலங்கை அபிவிருத்தி  சங்கத்தின் பொருளாளர் பஸ்நாயக்க,  பொருளாதார. அபிவிருத்தி  சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  தம்மிக்க ராஜபக்ச மற்றும் களுத்துரை மாவட்ட இணைப்பாளர்  பிரனாந்து ஆகியோர் கலந்துகொண்டதுடன், திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி  சங்கமும் இதன்போது தெரிவு செய்யப்பட்டது. 

தெரிவு செய்யப்பட்ட இவ் பொருளாதார அபிவிருத்தி சங்கத்தில்  ஒவ்வொரு பிரதேசசெயலகங்களுக்கும்  ஒரு ஒருங்கிணைப்பாளர் வீதம்  தெரிவு செய்யப்பட்டதுடன், மாவட்ட பொருளாதார  அபிவிருத்தி சங்த்தின் தலைவராக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலிருந்து பரமேஸ்வரன்  லோஜினி, உப தலைவராக  பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலிருந்து டபிள்யூ.எம்.என்.வாசல, செயலாளராக கந்தளாய் பிரதேச செயத்திலிருந்து  பி.அஜிமல்காண், உப செயலாளராக தம்பலகாமம் பிரதேச செயலகத்திலிருந்து  வீ.தங்கரூபன், பொருளாளராக மொறவேவ பிரதேச செயலகத்திலிருந்து  எச்.தயாழினி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மொறவேவ பிரதேச செயலகத்திலிருந்து எம்.யூசுப் பௌமி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.