இலங்கை வங்கியின் CDM -ATM இயந்திர சேவைகள் குச்சவெளி பிரதேச செயலகத்தில் மக்கள் பாவனைக்கு...
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஜனாப்.ஏ.முபாறக் அவர்களின் முயற்சியிில் குச்சவெளி பகுதியில் CDM -ATM இயந்திர சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது
கடந்த (18) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது
மூவின மக்களும் செறிந்து வாழும் குச்சவெளி பகுதியில் அதிகமான அரச அலுவலகங்கள், திணைக்களம் அமைந்துள்ளதால் இப்பகுதிக்கு வருகை தருகின்ற மக்கள் அவசர தேவை கருதி வங்கி நடவடிக்கை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாறக் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கடந்த 23.04.2020ஆம் திகதி தொடக்கம் இன்று வரை தொடர் முயற்சியின் காரணமாக குச்சவெளி பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் இலங்கை வங்கியின் CDM, ATM இயந்திரம் பொருத்தப்பட்டு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப்.ஏ.முபாறக் அவர்களினால் முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச மக்களின் முக்கிய தேவையாக காணப்பட்ட குறித்த செயற்திட்டத்தினை மேற்கொள்ள மூல காரணமாக இருந்த குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப்.ஏ.முபாறக் அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொண்டதுடன்
இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் திருகோணமலை அலுவலக ஊழியர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.