Header Ads

Breaking News
recent

மூதூர் பகுதியில் குண்டு வெடிப்பு : 15வயது சிறுவன் மரணம்....



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர்-அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம் (15வயது) தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஆட்டுக்கு கொல வெட்ட சென்ற சிறுவன் பற்றைக் காட்டுக்குள் வெட்டிக் கொண்டிருந்தபோது கீழே இருந்த கைக்குண்டில் கத்தி பட்டு வெடித்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

சிறுவனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.