Header Ads

Breaking News
recent

கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்' எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி...

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தும் 'கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்' எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 13 ஆம் திகதி (திங்கட்கிழமை) இரவு 08.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


நாட்டில் ஏற்பட்ட மின்தடை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியை எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


துறைசார்ந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், விசேடமாக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என எவரும்
கலந்து கொள்ள முடியும்.


ஒன்லைன் மூலமாக இடம்பெறும் இந் நிகழ்ச்சிக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


கலந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சமீஹா சபீர் தெரிவித்தார்.


பதிவுகளை மேற்கொள்ள: https://forms.gle/Y4HWTUELeDkSr9Q1A


மேலதிக விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முகப்புத்தகத்தின் (Facebook) மூலம் அறிந்து கொள்ளலாம்.






Powered by Blogger.