சுவாபிமானி 2020 தேசிய விருதின் இரண்டாம் இடத்தை வென்றார் திருகோணமலை மாவட்ட செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்...
ADMIN
சுவாபிமானி 2020 தேசிய விருதின் இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டார் திருகோணமலை மாவட்ட செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்
ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாபிமானி 2020 தேசிய விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு அபேகம வளாகத்தில் அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
விசேட தேவையுடைய நபர்களின் சுய உதவி அமைப்புகளை பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நபர்களின் சுய உதவி அமைப்புகளை பாராட்டும் தேசிய விருது வழங்கும் வைபவத்தில் தேசிய மட்டத்தில் விளைத்திறனான மாவட்ட உத்தியோகத்தருக்கான போட்டி பிரிவில் திருகோணமலை மாவட்ட செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் கா. சுகந்தினி இரண்டாம் இடத்தை பெற்றதுடன் மாவட்டத்திற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இவ்விருது இவருக்கு கிடைக்கப் பெற்றமை குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட திணைக்கள தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.