பல பெண்களை காதலித்து நிர்வாண படம் எடுத்த காதலன் : தலைமறைவான நிலையில் கைது - இலங்கையில் சம்பவம்...
காதலியின் நிர்வாண படத்தை இணையதளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த காதலனை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர், பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல தொலைப்பேசி அழைப்பை எடுத்து இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.
ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு இளைஞன் வருகைதரும் வேளையில் இடைநடுவிலேயே மறித்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இவர் பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அச்சம்பவங்களுக்காக பொலிசாரினால் தேடப்பட்டுவருபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மேலும் பல பெண்களை காதலித்து, காதலித்த பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும வைத்துள்ளதகவும் அவற்றை நண்பர்கள் மற்றும் இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பது இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவத நடவடிக்கைகள் மேற்றக்கொள்ளப்பட்டுள்ளதகவும் பொலிசார் தெரிவித்தனர்