Header Ads

Breaking News
recent

இ.த.க வசமிருந்த வெருகல் பிரதேச சபை மொட்டு கட்சியின் வசம் திரும்பும் சத்தியம்…

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
இலங்கை தழிழரசு கட்சி வசமிருந்த திருகோணமலை வெருகல் பிரதேச சபையின் 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (29) வெருகல் பிரதேச சபையின் 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் சபையின் தவிசாளருமான க.சுந்தரலிங்கம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது

இந்நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக 06 உறுப்பினர்களும் எதிராக 07 உறுப்பினர்களும் வாக்களித்து மேலதிக ஒரு வாக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த வெருகல் பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வசனம் செல்வதத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபிலன் அவர்கள் தெரிவித்தார்

மேலும் அவர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும்போது திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற 13 உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான வெருகல் பிரதேச சபை தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேச சபையாக காணப்படுவதுடன் வெருகல் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரம் இலங்கை தமிழரசு கட்சியின் வசம் இருந்த போதிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாக்கெடுப்பின் போது தற்போது தோற்கடிக்கப்பட்டு தமிழரசு கட்சியின் அதிகாரங்கள் இன்றுடன் இல்லாமல் போயுள்ளது.

இவ்வாறு இருக்கையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேசத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் வெருகல் பிரதேச தமிழ் மக்கள் மீது அன்பும் ஆதரவுமுள்ள அரசியல் தரப்புகள் இச்சூழ்நிலையில் தோற்கடிக்கப்பட்ட பெரும்பான்மையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வெருகல் பிரதேசசபை தள்ளப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடித்த வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் இந்த சூழ்நிலையில் எம்மோடு இணைந்து கைகோர்த்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன் வாருங்கள் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள அழைப்பு விடுத்துள்ளார்

மேலும் பிரதேச சபை கட்சிகளுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் தற்போது ஆட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உங்கள் கூட்டு கட்சியில் இருந்து விலகுவதாக கசிந்துள்ள கருத்துக்கு உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பதில் அளித்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்துக்கொண்டால் பலக்கூட்டு கட்சிகளுடன் இணைந்து ஒரு கட்சியாகவே காணப்படுகின்றது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது எங்களுடன் இருக்கின்ற சகோதர காட்சிகளில் அதுவும் ஒன்று இவ்வாறு இருக்கையில் ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளுக்கு முடிவு எட்டப்படமாட்டாது

கட்சிகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கின்றது ஒவ்வொரு செயற்பாடுகள் இருக்கின்றது சில சந்தர்ப்பங்களில் சகோதர கட்சிக்குள் சில சில முரண்பாடுகள் ஏற்படலாம் எவ்வாறு ஏற்பட்டாலும் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்திலும் சரி பிரதேச சபைகளும் சரி தனியாக ஒரு ஆட்சி பீடத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை எனவே சகோதர கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு விலகி தனித்து செயற்படுவார்கள் என எண்ணுவது சாத்தியமற்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபிலன் அதுகோரல தெரிவித்தார்

மேலும் எந்த வகையிலும் எந்த ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இயங்கும் என நாங்கள் நினைக்கவில்லை என இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.