திருமலை ஸாஹிரா கல்லூரிக்கு குடிநீர் தொகுதி கையளிப்பு...
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொவிட் கொரோனா வைரஸ் நோயினை கருத்திற்கொண்டு திருகோணமலை தி/ஸாஹிறா கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சுகாதார நலன் கருதி பல பேர் பயன்படுத்தக்கூடியவாரான நீர் தொகுதி உத்தியாகபூர்வமாக கையாளிக்கப்பட்டது.
நேற்று (15) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் உத்தியாகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தண்ணீர் தாங்கி மற்றும் நீர் வசதியினை ஏற்படுத்தித் தருமாறு பாடசலை அதிபர் அலி சப்ரி மற்றும் பெற்றோர்களினால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இவ் நீர் தொகுதி கையளிக்கப்பட்டது
இதுதொடர்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அல் ஹித்துமத்துல் உம்மா அமைப்பின் அனுசரனையுடன் இவ் குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு சுகாதார வழிமுறையினை பின்பற்றி கையளிக்கப்பட்டது
மேலும் இவ்வாறான குடிநீர் தொகுதி இன்றினை அமைத்துத் தந்தமைக்கு அல் ஹித்துமத்துல் உம்மா அமைப்பின் பணிப்பாளர் பாதிஹ் கஸ்ஸாலி அவர்களுக்கும்
பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களுக்கும்
கல்லுரிரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை சார்பாக நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அலி சப்ரி கல்லூரியின் ஆசிரியர்கள் ஆரம்ப பிரிவு மாணவர்கள்,கிராமசேவையாளர்,அல் ஹித்துமத்துல் உம்மா அமைப்பின் இணைப்பாளர் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.